‘100 சதவீதம் அவர் டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும்’ என்று முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் இந்த நட்சத்திர கிரிக்கெட் வீரருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்..

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் விராட் கோலி 3 வகையான கிரிக்கெட்டிலும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.. ஒரு போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆடக்கூடிய விராட் கோலி சமீப காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அதே நேரத்தில் கோலியின் டி20 கேரியர் முடிந்து விட்டது என்றே இணையத்தில் விவாதிக்கப்படுகிறது.. காரணம் என்னவென்றால் கடந்த 2022 டி20 உலக கோப்பையில் விராட் கோலி பங்கேற்றார். ஆனால் அதன்பிறகு அவர் இந்திய அணிக்காக ஒரு டி20 போட்டி கூட விளையாடவில்லை. எனவே இதை வைத்துப் பார்க்கும்போது பிசிசிஐ டி20 அணிக்கு இளம் வீரர்களை தற்போது தயார் செய்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆகவே கோலியை கழட்டிவிட பிசிசிஐ முடிவு செய்ததாக ரசிகர்கள் நினைக்கின்றனர். எனவே விராட் கோலி இனிவரும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடுவது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், விராட் கோலி தனது பாணி, அனுபவம் மற்றும் அழுத்தத்தின் கீழ் செயல்படும் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். 2024 டி20 உலகக் கோப்பையில் கோலி இந்திய அணியின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று பங்கர் விரும்புகிறார். மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா நடத்தும் டி20 உலகக் கோப்பை 2024 ஜூன் 4 முதல் ஜூன் 30, 2024 வரை நடக்கிறது.

2022 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி பங்கேற்றார், அங்கு இந்திய அணியின் பயணம் அரையிறுதியில் முடிந்தது. மெல்போர்னில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் குவித்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்ததை கிரிக்கெட் ரசிகர்களால் நீண்ட காலமாக மறக்க முடியாது. இருப்பினும், 2022 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, கோலி ஒரு டி20 சர்வதேசப் போட்டியில் கூட ஆடவில்லை.

 

சஞ்சய் பாங்கர் என்ன சொன்னார்?

கிரிக்கெட் பாசு யூடியூப் சேனலில் சஞ்சய் பங்கர் பேசுகையில், விராட் கோலி ஒரு ஜாம்பவான் “100 சதவீதம் கோலி டி20 அணியில் இடம்பிடிக்க வேண்டும்” என்றார். கடந்த டி20 உலகக் கோப்பையில் அந்த நெருக்கமான போட்டிகளில் அவர் என்ன செய்தார், விராட் கோலி டி20 ஐ கிரிக்கெட் மற்றும் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதைப் பார்க்க முடியாது என்பதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை” அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் அவர் பங்கேற்க வேண்டும் என்றார்.

கோலியின் அனுபவமும், அழுத்தத்தின் கீழ் செயல்படும் திறனும் அவரை அணியில் சிறப்பானதாக ஆக்குகிறது என்று பாங்கர் வலியுறுத்தினார். கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்த கவலைகளை பாங்கர் நிராகரித்தார் மற்றும் முக்கியமான தருணங்களில் ஒரு வீரரின் செயல்திறன் பயனுள்ளதாக இருக்கும் என்றார். கோலியின் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மெல்போர்னில் விளையாடிய இன்னிங்ஸை மேற்கோள் காட்டினார்.

கோலியின் சிறப்பான ஸ்டைலை பாங்கர் குறிப்பிட்டார் :

சிக்ஸர் அடிக்காமல் ரன் குவிப்பதை உள்ளடக்கிய கோலியின் ஆட்ட பாணியே அவரை சிறப்புறச் செய்கிறது என்று பாங்கர் கூறினார். ஐபிஎல் 2023க்கான ஆதாரம், அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் சதம் அடித்தபோது நான் பார்த்தேன்.

மேலும் “உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும் ஒரு மிகப்பெரிய சூழ்நிலையில், ஒரு சிறிய தவறு கூட உங்களுக்கு தோல்வியை கொடுக்கலாம். அதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு, அதை கடந்து வந்த பெரிய வீரர்கள் தேவை. இதுபோன்ற நேரங்களில், உங்கள் ஸ்ட்ரைக் ரேட் என்ன அல்லது ஐபிஎல்லில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது முக்கியமல்ல. பெரிய மேட்ச்களில் பெரிய மேட்ச் பிளேயர் தேவை. இந்தியா-பாகிஸ்தான் போட்டியிலும் கோலி அப்படிப்பட்ட உணர்வை வெளிப்படுத்தினார்” என்று பேசினார்..