தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தங்களது கட்சியின் விளம்பரங்களுக்காகவும், பிரசார மேடைகளிலும் குழந்தைகளைப் பயன்படுத்தியதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. தேர்தல் விதிகளின்படி பிரசாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்துவது முற்றிலும் சட்டவிரோதம் என்பதால், தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தரப்பில் வரும் ஜூலை 1-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். மேலும், தவெக-வின் விளக்கத்தைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை அமையும் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
