லண்டன் மெட்ரோ ரயிலில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் திடீரென தனது ஆடைகளை முழுவதுமாகக் களைந்து நிர்வாணமாக நின்ற செயல், பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அதிகம் இருந்த நிலையில், அந்த நபரின் இத்தகைய செயலால் பயணிகள் கடும் சங்கடத்திற்கு உள்ளாகினர். அங்கிருந்தவர்கள் அவரிடம் கண்ணியமாக ஆடையை அணியுமாறு அறிவுறுத்தியும், அவர் எதையும் பொருட்படுத்தாமல் ஆபாசமான வார்த்தைகளால் பயணிகளைத் திட்டத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த அநாகரீகமான செயலால் பொறுமை இழந்த சக பயணிகள், அந்த நபரைத் தடுத்து நிறுத்த முயன்றபோது வாக்குவாதம் முற்றிக் கைக்கலப்பாக மாறியது.

சம்பவம் விபரீதமானதை அடுத்து, ஆத்திரமடைந்த பயணிகள் அந்த நபரைத் தாராளமாகத் தாக்கியதோடு, அடுத்த ரயில் நிலையம் வந்ததும் அவரை ஆடையின்றி நிர்வாண நிலையிலேயே ரயிலில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இந்த முழுச் சம்பவமும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. “பொது இடங்களில் இத்தகைய நபர்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது” என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்தாலும், “மனநலம் பாதிக்கப்பட்டவரைத் தாக்குவதற்குப் பதிலாக காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கலாம்” என்று மனித உரிமை ஆர்வலர்கள் மாற்றுக்கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் லண்டன் போக்குவரத்துத் துறையினரிடையே பாதுகாப்பு குறித்தப் பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.