
உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபாவின் ஆன்மீக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது .இந்த கூட்டம் முடிந்து வெளியேறிய போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 121 பேர் உயிரிழந்தார்கள். இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையி, போலே பாபா மீது பாலில் வன்கொடுமை வழக்கு உள்ளது. அவர் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். அதற்கான ஆவணங்களை கைப்பற்றி உள்ளோம். 13 ஏக்கரில் அவர் 5 நட்சத்திர ஹோட்டல் போல சொகுசு ஆசிரமம் கட்டியிருக்கிறா.ர் அந்த ஆசிரமம் அமைந்துள்ள இடம் மட்டும் நாலு கோடி மதிப்புள்ளது அவருடைய உண்மையான பெயர் சூரஜ் பால். இதற்கு முன்பு காவல்துறையின் தலைமை காவலராக பணிபுரிந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.