
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஆனந்த் கட்டே என்ற 23 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு சமூக ஊடகங்கள் மூலமாக ஒரு 28 வயது பெண் டாக்டர் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவரும் நன்றாக பழகி வந்த நிலையில் அந்த பெண் டாக்டரை வாலிபர் ஒரு லாட்ஜூக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு வைத்து குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து அந்த வாலிபர் டாக்டருக்கு கொடுத்து பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அவர் வீடியோவாகவும் எடுத்துள்ளார். அந்த பெண் டாக்டரிடம் தொடர்ந்து வீடியோவை காட்டி தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு வாலிபர் மிரட்டியுள்ளார்.
அதற்கு பெண் டாக்டர் மறுப்பு தெரிவித்ததால் அந்த வாலிபர் பலாத்கார வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.