
வேலூர் மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டி என்னும் ஊரில் முனுசாமி(68) என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் திருத்தணி அருகில் ரயில்வே கேட் பகுதியில் ரயில் பாதை தண்டவாளம் சீர் செய்யும் ஒப்பந்த பணி செய்து வந்துள்ளார். இவர் பொன்பாடி ரயில்வே கேட் பக்கத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு 2 ஆண்டுகளாக தங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை குளிப்பதற்காக மின் மோட்டாரை முனுசாமி இயக்கிய நிலையில் அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்ட முனுசாமி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த திருத்தணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முனுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ,இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.