ரேஷன் அட்டை என்பது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து வழங்கப்பட்ட ஒரு அட்டை. இதை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவு தானியங்கள் கிடைக்கிறது. மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசின் உதவிகளும் கிடைக்கிறது.  இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் உள்ள மணிச்சக் பஞ்சாயத்து அலுவலகத்தை ஒட்டியுள்ள குளத்தில் ரேஷன் கார்டுகள்  வீசப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டதா அல்லது வேறு காரணங்களுக்காக வீசப்பட்டதா?  என்று அரசு விசாரணை செய்ய அரசு சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து இந்த ரேஷன் கார்டுகள் அனைத்தும் எங்கிருந்து வந்தது என்று குறித்து விசாரணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.