இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகள் மாதம் தோறும் 3000 ரூபாய் என ஆண்டுக்கு 36 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத் தொகையை இந்த திட்டத்தின் மூலம் பெறலாம். அதற்காக 18 முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

அதாவது 18 வயது உடையவர்கள் மாதம் தோறும் 55 ரூபாயும், 30 வயது உடையவர்கள் 110 ரூபாயும், அதே போல நீங்கள் 40 வயதில் இருந்து திட்டத்தில் சேர விரும்பினால் ரூ. 220 முதலீடு செய்ய வேண்டும். அதன் பின் உங்களுக்கு 60 வயது பூர்த்தி செய்யப்பட்டதும் மாதம் ரூ. 3000 பென்ஷன் கிடைக்கும். இரண்டு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற முடியும் எனவும் அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று இது தொடர்பான விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு வங்கி கணக்கு இணைத்து மாதந்தோறும் ஓய்வூதிய திட்டத்திற்கான தொகையை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.