உலகெங்கிலும் விழித்திரை (Cornea) பாதிப்பால் பார்வை இழப்பிற்கு உள்ளானவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வரப்பிரசாதமாக ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. வழக்கமாக மனிதர்களிடம் இருந்து தானமாகப் பெறப்படும் விழித்திரைகளுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், விஞ்ஞானிகள் தற்போது மீன் செதில்களில் (Fish Scales) இருந்து குறைந்த செலவில் செயற்கை விழித்திரையை உருவாக்கிப் பெரும் சாதனை படைத்துள்ளனர்.

மீன் கழிவுகளாகக் கருதப்படும் செதில்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கொலாஜன் (Collagen) புரதத்தைப் பயன்படுத்தி இந்த விழித்திரை உருவாக்கப்பட்டுள்ளது.

இது மனித உடலுக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், வழக்கமான சிகிச்சைகளை விட இது மிகவும் விலை குறைவானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, வளரும் நாடுகளில் விழித்திரை மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இந்த ‘மீன் செதில் விழித்திரை’ ஒரு புதிய ஒளியை ஏற்றி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.