இந்திய ரிசர்வ் வங்கி சேமிப்பு கலங்குகளுக்கான குறைந்தபட்ச இருப்பு தொகையை நிர்ணயிக்காது என கூறியுள்ளது. ஆகஸ்ட் 11ஆம் தேதி குஜராத்தில் நடந்த நிதி நிகழ்ச்சியின் போது ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மஹோத்ரா கூறியதாவது, சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்பு தேவையையும், அதை பூர்த்தி செய்யாததற்கான அபராதனங்களையும் சம்பந்தப்பட்ட வங்கிகள் தான் முடிவு செய்யும்.
குறைந்தபட்ச இருப்பு தொகை கொள்கை ரிசர்வ் வங்கியில் ஒழுங்குமுறைக்கு கீழ் வராது. சில வங்கிகள் அதை பத்தாயிரம் ரூபாயாக நிர்ணயித்திருந்தாலும் சில வங்கிகள் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்குகளை அனுமதிக்கிறது. இது சம்பந்தப்பட்ட வங்கியின் விருப்பம் என உறுதிப்படுத்தியுள்ளார். சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாததற்காக எஸ்பிஐ, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி ஆகியவை எந்த அபராத தொகையும் வசூல் செய்வதில்லை.
ஆனால் சில தனியார் வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காத காரணத்திற்காக அபராதம் வசூல் செய்கிறது. ஐசிஐசிஐ வங்கியில் புதிய கணக்கு தொடங்குபவர்களின் குறைந்தபட்ச சராசரி மாதாந்திரம் எனவும் பேலன்ஸ் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. நகர்ப்புற மெட்ரோ பகுதிகளில் 50 ஆயிரம் ரூபாயாகவும், சிறு நகரங்களுக்கு 25 ஆயிரம் ரூபாயாகவும், கிராமப்புற பகுதிகளுக்கு 10,000 ரூபாயாகவும் ஐசிஐசிஐ வங்கி உயர்த்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
