தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நடப்பாண்டுகான குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி நடைபெற்றது. சுமார் 6224 காலி பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்ற நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அடுத்த மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2024-ம் ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 1.33 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.