நியூயார்க்கில் நடந்த ஒரு பிரம்மாண்ட பேஷன் ஷோ நிகழ்ச்சியில், நபர் ஒருவர் குப்பைப்பையை ஆடையாக அணிந்துகொண்டு மிகவும் சாதாரணமாக மேடையில் நடந்து வந்து அனைவரையும் அதிரவைத்தார்.
அங்கிருந்த பார்வையாளர்கள் மற்றும் பேஷன் நிபுணர்கள் அனைவரும் இது ஒரு புதிய வகை நவீன வடிவமைப்பு என்று நினைத்து ரசித்துக் கொண்டிருந்தார்களே தவிர, யாருக்கும் அது ஒரு போலி நபரின் செயல் என்று முதலில் சந்தேகமே வரவில்லை.
ஆனால், மேடையின் இறுதியில் அந்த நபர் அடிக்கடி பின்னால் திரும்பிப் பார்த்ததைக் கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள், அவர் உண்மையான மாடல் இல்லை என்பதைக் கண்டுபிடித்து அவரை மேடையிலேயே மடக்கிப் பிடித்தனர்.
This man simply walked into the fashion show wearing a garbage bag – and no one thought it was strange until security found him pic.twitter.com/pZCRWyMfTx
— Science girl (@sciencegirl) April 11, 2026
“>
பேஷன் என்ற பெயரில் எதைச் செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்த இந்த விசித்திரமான வீடியோ தற்போது இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
