தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணமும் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு கல்லூரிக்கு செல்லும் பெண்களுக்காக புதுமைப்பெண் திட்டம் அறிவிக்கப்பட்டது. இப்படி பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் திமுக அரசு தற்போது சுய தொழில் தொடங்குவதற்கு பெண்களுக்கு உதவி தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழக அரசு முதற்கட்டமாக ரூ‌.1 கோடி மானியமாக ஒதுக்கி உள்ளது. அதாவது ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக ரூ.50000 மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். மேலும் அதன்படி தற்போது 200 பெண்களுக்கு தலா ரூ.50,000 வீதம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.