சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3360 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்றும் விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,00,400 ரூபாய்க்கும், ஒரு கிராம் 12,550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 13,690 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,09,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்று ஒரு கிராம் 258 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை 2,58,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.