
ஷாஹீன் ஷா அப்ரிடி, ஜஸ்பிரித் பும்ராவின் புதிதாகப் பிறந்த குழந்தைக்குப் பரிசாக அளித்து, தந்தையானதற்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது, 2023 ஆசிய கோப்பை போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் சூப்பர் 4ல் நேற்று பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. ஆனால், போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. எனவே இன்றைய போட்டி ரிசர்வ் நாளான இன்று 3 மணிக்கு நடைபெறும். இந்தியா – பாகிஸ்தான் போட்டி நாளை (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஷஹீன் அப்ரிடி, ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஒரு சிறப்பு பரிசை வழங்கினார். பும்ரா சமீபத்தில் தந்தையானார், எனவே பும்ராவுக்கு அப்ரிடி பரிசு வழங்கி வாழ்த்தினார்.
செப்டம்பர் 4ஆம் தேதி பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசனுக்கு அங்கத் என்ற அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் கை புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு பும்ரா இந்த இனிய செய்தியை தெரிவித்தார். பும்ரா, “எங்கள் சிறிய குடும்பம் வளர்ந்துள்ளது, நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்கள் சிறுவன் அங்கத் ஜஸ்பிரித் பும்ராவை உலகிற்கு வரவேற்றோம். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், எங்கள் வாழ்க்கையில் இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறோம்” என தெரிவித்தார். தற்போது பாகிஸ்தானின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பும்ராவுக்கு பரிசு வழங்கும்போது, ஷாஹீன், “உங்கள் மகன் பிறந்ததற்கு உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் வாழ்த்துக்கள்” என்று கூறினார். கடவுள் அவரை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து உங்களைப் போலவே இருக்கட்டும்” என கூறினார். இதற்குப் பிறகு, பும்ராவும் நெகிழ்ந்து ஷஹீனுக்கு தேங்க்யூ தேங்க்யூ என பலமுறை தெரிவித்தார். இந்த வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட, அது வைரலாகி வருகிறது.
கடந்த காலங்களில் இந்தியா பாகிஸ்தான் வீரர்கள் காலத்தில் சண்டையிட்டுக் கொள்வதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனாலும் சேவாக் – அக்தர் போன்ற வீரர்கள் இன்னமும் நட்பாகத்தான் பழகி வருகிறார்கள். அதன்படி தற்போதைய காலகட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள் ஒரே ஒருவர் நட்பாக பேசி வருகின்றனர் களத்தில் அணி வெற்றி பெறுவதற்கு ஆக்ரோசத்தை வெளிப்படுத்தினாலும், போட்டிக்கு பின் இரு அணி வீரர்களும் நட்பாக பேசிவருவதை பார்த்திருப்போம். குறிப்பாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விராட் கோலியிடம் விளையாட்டு நுணுக்கங்களை கேட்டதாக கூட சமீபத்தில் தெரிவித்து இருந்தார். அதேபோல பாபர் அசாமின் பேட்டிங்கை கோலி பாராட்டியது மட்டுமில்லாமல், பாபர் அசாம் பார்ம் இல்லாமல் கஷ்டப்பட்டபோது ஊக்கப்படுத்தினார் கோலி. அதேபோல ரோகித் சர்மாவும் பாகிஸ்தான் வீரர்களிடம் பேசுவதை பேசுவதை பார்த்திருப்போம். அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் வீரர் அப்ரிடி இந்திய வீரர் பும்ராவுக்கு பரிசு வழங்கியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் யார்?
15 மார்ச் 2021 அன்று விளையாட்டு தொகுப்பாளர் சஞ்சனா கணேசனுடன் ஜஸ்பிரித் பும்ரா திருமணம் செய்து கொண்டார். சஞ்சனா கணேசன் ஒரு மாடல் மற்றும் தொகுப்பாளர். அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியாவுடன் பணிபுரிகிறார் மற்றும் பல கிரிக்கெட், பேட்மிண்டன் மற்றும் கால்பந்து நிகழ்வுகளை தொகுத்து வழங்கியுள்ளார். 2019 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையையும் சஞ்சனா கணேசன் தொகுத்து வழங்கினார். சிம்பயோசிஸ் இன்ஸ்டிடியூட்டில் பி.டெக் முடித்தார். அதில் தங்கப் பதக்கம் வென்றார். பின்னர் 2013-14ல் மென்பொருள் பொறியியல் படித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி மழையால் நிறுத்தம் :
மழை குறுக்கிட்டதால் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 4 போட்டி ஒத்திவைக்கப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச முடிவு செய்ய, இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா (56), ஷுப்மான் கில் (58) ஆகியோர் அதிரடியாக விளையாடி ஆட்டமிழந்தனர். ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா ஆகிய மூவரும் முதல் ஓவரிலேயே விக்கெட் எடுக்கத் தவறினர். இதனிடையே, மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டதால், இந்தியா 24.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது. திங்கட்கிழமையான இன்று இங்கிருந்து போட்டி ஆரம்பமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி 8 ரன்களுடனும், கேஎல் ராகுல் 17 ரன்களுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர்..
Spreading joy 🙌
Shaheen Afridi delivers smiles to new dad Jasprit Bumrah 👶🏼🎁#PAKvIND | #AsiaCup2023 pic.twitter.com/Nx04tdegjX
— Pakistan Cricket (@TheRealPCB) September 10, 2023
Shaheen Shah Afridi handing over a gift on behalf of the Pakistan team to Bumrah for his newborn baby. A lovely gesture.
So wholesome moment of the day 🫶🇵🇰🇮🇳 #ShaheenAfridi #INDvsPAK #PAKvIND #PakvsInd #IndiaVsPakistan pic.twitter.com/PJN8pOkYqI— Ahtasham Riaz 🇵🇰 (@AhtashamRiaz_) September 10, 2023