“மழை பாகிஸ்தானைக் காப்பாற்றியது” என்று பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். 

செப்டம்பர் 10 (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் ஆசியக் கோப்பை 2023 சூப்பர் ஃபோர் போட்டியை மழை காப்பாற்றியதாக  பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று பிரபலமாக அறியப்படும் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச முடிவு செய்ததற்காக விமர்சித்தார். இந்தியாவின் ஸ்கோர் 24.1 ஓவர்களில் 147/2 என்ற நிலையில் இருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்ட பிறகு அவரது இந்த கருத்துக்கள் வந்தன.

மழை தங்களைக் காப்பாற்றியது என்று அக்தர் கருத்து தெரிவித்தாலும், இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மான் கில் இருவரும் முதல் சில ஓவர்கள் வரை அவர்களுக்கு நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் தத்தமது அரைசதங்களை பூர்த்தி செய்து 121 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா (56), ஷுப்மான் கில் (58) ஆகியோர் அதிரடியாக விளையாடி ஆட்டமிழந்தனர். பின் விராட் கோலியும், கேஎல் ராகுலும் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்க விரும்பினர், பின்னர் மழை குறுக்கிட்டு போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பின்னர் அக்தர் தனது சமூக ஊடக கணக்கில் வெளியிடப்பட்ட வீடியோவில், “நான் போட்டியைப் பார்க்க வந்தேன், நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம், இந்திய மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள். மழை எங்களை காப்பாற்றியது, ஒரு நாள் மழை இந்தியாவைக் காப்பாற்றியது, ஆனால் இன்று மழை நம்மைக் காப்பாற்றியது” நாளை (இன்று) இந்த முறை மீண்டும் தொடங்க முடியும், மேலும் முதலில் பந்துவீச வேண்டாம் என்று புத்திசாலித்தனமான முடிவை எடுப்பதன் மூலம், என தெரிவித்தார்.

அதாவது, கடந்த முறை இந்தியாவை சுற்றி வளைத்தோம், மழை அவர்களை காப்பாற்றியது. இந்த முறை பாகிஸ்தான் மழையால் பாதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டது என்றும்,  ரிசர்வ் நாளில் போட்டி நடக்கும் என்று நம்புவதாகவும், முதலில் பந்து வீச பாகிஸ்தான் முடிவு செய்யாது என்றும் சோயப் அக்தர் கூறியுள்ளார். ஷோயப் அக்தருக்கு ரிசர்வ் நாள் விதி தெரியாதோ என்னவோ, ரிசர்வ் நாளில், மழையால் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து ஆட்டம் மீண்டும் தொடங்கும்.

கொழும்பில் நேற்றைய ஆட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது, இப்போது போட்டி திங்கட்கிழமை (செப்டம்பர் 11) இன்று ரிசர்வ் நாளாக நடைபெறும். நாளை இந்தியா 24.1 ஓவர்களுக்கு மேல் விளையாடும். ரிசர்வ் டே வழங்குவதன் மூலம் இந்தியா தனது 50 ஓவர்களை பேட் செய்யும் வாய்ப்பைப் பெறும். இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதால் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படலாம். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், வரும் செப்டம்பர் 17ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் நடைபெற உள்ள கான்டினென்டல் போட்டியில் இரு அணிகளுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்படும்.