ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறியது..

ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நம்பர்-1 ஆனது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒருநாள் அணிகளின் தரவரிசையை சனிக்கிழமை அதாவது செப்டம்பர் 9 அன்று புதுப்பித்துள்ளது. பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி  ஆஸ்திரேலியா அணி முதலிடத்தை எட்டியுள்ளது. கடந்த மாதம், ஆசிய கோப்பை தொடங்குவதற்கு சற்று முன்பு, இலங்கையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 3-0 என கைப்பற்றியது, மேலும் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது. ஆனால், தற்போது பாகிஸ்தான் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா 121 ரேட்டிங் புள்ளிகளை எட்டியுள்ளது :

ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை சனிக்கிழமையன்று நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தரவரிசையில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா 121 ரேட்டிங் புள்ளிகளை எடுத்து ஒரு புள்ளியில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளியுள்ளது. ஐசிசி தரவரிசையில் இந்தியா 114 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.

தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த ஆஸ்திரேலியா :

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்தது. டி20 தொடரை 3-0 என கைப்பற்றிய அந்த அணி, 2வது ஒருநாள் போட்டியில் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லாபுஷென் ஆகியோர் சதம் அடித்தனர். இரண்டாவது இன்னிங்சில், லெக் ஸ்பின்னர் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவை இலக்கை அடைய விடவில்லை. 2வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 123 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் தொடரில் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

ப்ளூம்ஃபோன்டைனில் உள்ள மங்காங் ஓவல் மைதானத்தில் டாஸ் இழந்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய தென்னாபிரிக்க அணி 41.5 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் இருந்து ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய சார்பில் 124 ரன்களை பெற்ற லாபுஷேன் ஆட்ட நாயகனாக தேர்வானார். டேவிட் வார்னரும் சதமடித்தது குறிப்பிடத்தக்கது.