
இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு இருக்கிறது. அந்தவகையில் இங்கு வயதான பாட்டியொருவர் அவரின் வீட்டிலுள்ள பூஞ்செடிகளுக்கு நீர் ஊற்றுகிறார். பின்னர் அவரால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. ஆகையால் எங்கு அமரலாம் என கீழே தேடுகிறார். அப்போது அங்கிருந்த உட்காரும் பலகையை நாய்க்குட்டி நகர்த்திக் கொண்டு வந்து தருகிறது.
இந்த காட்சியை பார்க்கும் பொழுது வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கின்றது. நாய்குட்டி இவ்வளவு குட்டியாக இருக்கும் போதே அவரின் உரிமையாளரின் மீது அதிகமான அன்பு கொண்டுள்ளது. இன்னும் வளர்ந்தால் நன்றாக பார்த்துக்கொள்ளும் என்று இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
— out of context dogs (@contextdogs) August 7, 2023