இந்தியாவில் பல மாநிலங்களில் பருவமழை முன்னதாகவே தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இதனால் மும்பையில் கடந்த 1-ம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை மட்டுமே குடியிருப்பு மற்றும் வணிக பகுதிகளில் இருந்து சுமார் 100 பாம்புகளுக்கு மேல் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை ஜனவரி 1 முதல் ஜூலை 25 வரையில் 266 பாம்புகளுக்கு மேல் மீட்கப்ப்பட்டுள்ளதாக தரவுகள் வெளியாகி உள்ளது.
மீட்கப்பட்ட பாம்புகளில் 86 பாம்புகள் இந்திய எலிவகை பாம்புகள், 46 பம்புகள் நாகப் பாம்புகள் என தரவுகள் கூறுகிறது. அவற்றில் எலிவகை பாம்புகள் பொதுவான நச்சுத்தன்மை உடைய பாம்பு எனவும், நாகப்பாம்பு அதிக விஷத்தன்மை உடைய பாம்பு எனவும் தரவுகள் கூறுகிறது. இதுகுறித்து வனவிலங்கு காவலர் கூறுகையில், இந்த 2 வகை பாம்புகளும் பெரும்பாலும் எலிகள், சுண்டெலிகள், அணில்கள் போன்றவற்றை மட்டுமே உணவாக உண்கின்றன.
இந்த பாம்புகள் பொதுவாக வடிகால்கள் மற்றும் குப்பை தொட்டிகளில் இருந்து மீட்கப்பட்டது. ஏனெனில் குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பை தொட்டிகள் மற்றும் வடிகால்கள் திறந்தவெளியில் இருப்பதால் பாம்புகள் எளிதாக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்கின்றன. நாம் சாப்பிட்டுவிட்டு மீதம் இருக்கும் உணவுகளை கழிவுகளில் கொட்டுவதால் அதை உண்ணுவதற்கு எலி போன்ற குறைந்த விஷத் தன்மை உடைய ஜந்துக்கள் நகரத்திற்குள் செல்கிறது.
இந்த ஆண்டு மீட்கப்பட்ட பாம்புகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளை விட குறைவு. எங்களது மீட்பு குழுவினர் பாம்புகள் இருக்கும் இடத்திற்கு செல்வதற்கு முன் அங்கிருந்து பல பாம்புகள் தப்பி செல்கின்றன. இந்த பாம்புகள் சமீப காலமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
ஏனெனில் பொதுமக்கள் பலர் பாம்புகளுடன் வாழ தயாராக உள்ளனர். பாம்புகளின் விஷத்தன்மையை அறிந்து அவற்றால் தனக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்பதை உணர்ந்த பின்பே பொதுமக்கள் அச்சமின்றி பழகுகின்றனர். பாம்புகள் மீட்கப்பட்ட பிறகு அவற்றை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி பின்பு அவற்றினை இயற்கையான வாழ்விடத்தில் விடுகின்றோம் என வனவிலங்கு காவலர் கூறியுள்ளார்.
