
தென்காசி மாவட்டத்தில் உள்ள மாறாந்தை பகுதியில் கணேசன் (50)-முத்துலட்சுமி (45) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் கணேசன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்க்கும் நிலையில் முத்துலட்சுமி தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு 5 மகன்கள் மற்றும் 5 மகள்கள் இருக்கும் நிலையில் ஒரு மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகிவிட்டது. இதில் கணேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் சரிவர வேலைக்கு செல்லாததோடு அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகறாறு செய்துள்ளார். இதனால் முத்துலட்சுமி தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்ப்பதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக கணேசன் ஒருவரிடம் ரூ.30,000 கடன் வாங்கிய நிலையில் அதை முத்துலட்சுமியின் தங்கையான சாந்தி திரும்ப கொடுத்துள்ளார்.
ஆனால் சாந்திக்கு முத்துலட்சுமியால் பணத்தை கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் கணேசன் எதற்காக சாந்திக்கு பணத்தை கொடுக்கவில்லை எனக் கூறி தன் மனைவியிடம் தகறாறு செய்துள்ளார். அதன் பிறகு முத்துலட்சுமி தன் குழந்தைகளுடன் தூங்குவதற்காக சென்றுவிட்டார். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை எடுத்து கணேசன் அசந்து தூங்கிக் கொண்டிருந்த முத்துலட்சுமியின் தலையில் போட்டு விட்டார். இதில் தலை சிதறி முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு தப்பி ஓடிய கணேசனை தேடி வந்த நிலையில் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.