விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 2019ல் ஆரம்பிக்கப்பட்ட சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. சமையலுடன் நகைச்சுவையும் கலந்து உருவாக்கப்பட்டதால் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சினிமா பிரபலங்கள் குக் ஆக கலந்துகொள்ள, நகைச்சுவை தெரிந்த சிலர் கோமாளிகளாக பங்கேற்றனர். இப்போது 4-வது சீசன் ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியில் முதல் சீசனில் இருந்து கோமாளிகளில் ஒருவராக மணிமேகலை இருந்தார். இந்த 4-வது சீசனின் 2-வது வாரத்திலிருந்து தான் மணிமேகலை கோமாளியாக வந்தார். 4 வாரங்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மணிமேகலை, இன்றைய நிகழ்ச்சியுடன் விலகுவதாக நேற்று அறிவித்து உள்ளார். இவ்வாறு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து அவர் திடீரென விலகியதற்குரிய காரணம் இதுவரை தெரியவில்லை.