தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் படம் வெளிவர இருக்கிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் தன் பள்ளிப் பருவத்தில் இருக்கும் ஒருவரை காதலித்து வருவதாகவும், இருவீட்டார் சம்மதத்துடன் இன்னும் சில வருடங்களில் இவர்களது திருமணம் நடைபெற போவதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது. எனினும் இதுபற்றி கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து எந்தவொரு அறிவிப்பும் இதுவரையிலும் வெளிவரவில்லை. அவரது திருமணம் மற்றும் காதல் பற்றி தொடர்ச்சியாக சில சர்ச்சைகள் எழுந்துக்கொண்டு தான் இருக்கிறது.

அதன்படி, கீர்த்தி சுரேஷுடன் ஒரு நபர் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர் தான் கீர்த்தியின் காதலர் என கூறி வருகின்றனர். எனினும் அவர் கீர்த்தியின் காதலர் இல்லை நண்பர் என இப்போது தகவல் தெரியவந்து உள்ளது. இருப்பினும் சர்ச்சைக்குரிய அடிப்படையில் இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.