பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர், அண்மையில் குருகிராமில் நடந்த படப்பிடிப்பின் போது செய்த நெகிழ்ச்சியான செயல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர், நடிகருடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு அவரை அணுகியுள்ளார். ஆனால், அவரிடம் நவீன கேமரா வசதி கொண்ட ஸ்மார்ட்போன் இல்லாததால், ஒரு சாதாரண கீபேட் போனை வைத்திருப்பதை கண்டு அனுபம் கெர் வருத்தமடைந்தார்.

அந்த காவலரின் ஏக்கத்தைப் புரிந்துகொண்ட நடிகர், உடனடியாக அவருக்கு ஒரு புதிய ஸ்மார்ட்போனை பரிசாக வழங்கியதோடு, அந்தப் புதிய போனில் எடுக்கப்படும் முதல் புகைப்படம் தன்னுடன் இருக்க வேண்டும் என்று கூறி அவருடன் மகிழ்ச்சியாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பலரும் அனுபம் கெரின் மனிதாபிமானத்தைப் பாராட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Anupam Kher (@anupampkher)

“>

மேலும் “நிஜமான ஹீரோக்கள் இப்படித்தான் இதயங்களை வெல்வார்கள்” என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு சில விமர்சனங்கள் எழுந்தாலும், அந்த ஏழை காவலரின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியே இந்தச் செயலின் வெற்றி என்று பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆடம்பரமான திரையுலகில், சக மனிதரின் சிறு குறையை அறிந்து உடனடியாக உதவிய அனுபம் கெரின் இந்த செயல் பலருக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.