பாலிவுட் திரையுலகின் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ஷாருக்கான். இப்போது இவர் டைரக்டர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஷாருக்கானின் மகன் சுஹானா ஆர்ச்சிஸ் படத்தின் வாயிலாக பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். அதோடு இப்படத்தில் சினிமா பிரபலங்களின் வாரிசுகள் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்காக சுஹானா நடனம் மற்றும் உடற்பயிற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் சுஹானா, இப்போது கிளாமரான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ஷாருக்கான் ரசிகர்கள், அப்பா பெயரை கெடுக்காதீங்க என கமெண்ட் செய்துள்ளனர்.