தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இதையடுத்து இவர் அயலான், இந்தியன் 2,  தெலுங்கில் ஐ லவ் யூ போன்ற படங்களில் நடித்து உள்ளார். இதில் ஐ லவ் யூ ரொமான்டிக் த்ரில்லர் படம் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வருகிற 16ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் வரும் ஒரு காட்சியில் தண்ணீருக்கு அடியில் 2 நிமிடங்கள் மூச்சடக்கியவாறு இருக்கவேண்டுமாம். அதற்கென ரகுல் ப்ரீத் சிங் கடும் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

இதுபற்றி ரகுல் ப்ரீத் சிங் கூறியதாவது, ஸ்கூபா பயிற்சியாளரான ஜஹான் அடன்வாலா என்பவர் தண்ணீருக்குள் மூச்சை அடக்குவதற்கு எனக்கு பயிற்சியளித்தார். இந்த படத்தில் வரும் ஒரு காட்சிக்காக நான் மதியம் 2 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை தண்ணீருக்குள்ளேயே இருந்தேன். ஒவ்வொரு ஷாட் முடிந்தவுடன் தன் மீது வெது வெதுப்பான நீரை ஊற்றுவார்கள். தண்ணீரிலுள்ள குளோரின் காரணமாக என் கண்கள் எரிந்தது. எனினும் அந்த சவாலை எதிர்கொண்டு நடித்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.