ஜெர்மனி நாட்டில் உள்ள மக்டேபெர்க் நகரில் ஒரு சந்தை உள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான மக்கள் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் இரண்டு பேர் உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில், 60க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது குவிந்திருந்த மக்கள் கூட்டத்தில் கார் மோதி கொலை என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய சவுதியைச் சேர்ந்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.