கிரெடிட் கார்டு என்பது ஒரு வங்கியால் வழங்கப்படும் கடன் அட்டை. மாதம் தோறும் வருவாய்க்கு அதிகமான செலவுகளை செய்வதற்கு தேவையான ஒரு கடன் அட்டை ஆகும். இதன் மூலம் பொருள் அல்லது சேவையை வாங்கலாம் இதற்கு பணமாகவோ அல்லது கடனாகவோ வங்கிக்கு கட்ட முடியும். சமீப காலமாக அனைத்து வங்கிகளும் கிரெடிட் கார்டுகளுக்கு பல சலுகைகளும் மற்றும் கேஷ் பாக்குகளும் வழங்கி வருகிறது.

கிரெடிட் கார்டுகள் குறுகிய காலத்திற்கு வங்கிகளில் பணத்தை கடன் வாங்க அல்லது தவணைகளில் திருப்பி செலுத்த அனுமதிக்கும் ஒரு வசதியாகும். கிரெடிட் கார்டுகள் பயன்படுத்துவோர் அதற்கு பல கட்டணங்கள் கட்ட வேண்டும். அதனால் பயனர்கள் தங்களது தேவையை அறிந்து நன்கு ஆராய்ந்து கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டும். பொதுவாக கிரெடிட் கார்டுகளுக்கு தாமதமாக செலுத்தினால் கட்டணம், மாதாந்திர கட்டணம், வரி கட்டணம், புதுப்பித்தல் கட்டணம், வட்டி விகிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்து தேவையான கிரெடிட் கார்டுகளை விண்ணப்பித்து பெறலாம்.