பிரபலமான கிரிக்கெட் வீரர் கங்குலி. இவருடைய வாழ்க்கையை படமாக்குவதற்கு தற்போது முயற்சிகள் நடந்து வருகிறது. தன்னுடைய வாழ்க்கை படத்தை எடுப்பதற்கு தான் அனுமதி கொடுத்து விட்டதாக ஏற்கனவே கங்குலி கூறியிருந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. நடிகர் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் கங்குலி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழு தரப்பிலிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

விரைவில் கங்குலியாக நடிப்பது யார் என்று அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2000-ம் ஆண்டு கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவர் பேட்டிங்கில் மிகவும் வல்லவர். கங்குலி தலைமையில் இந்திய அணி வெளிநாடுகளில் 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில் 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் கிரிக்கெட் வீரர் டோனி, பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த மிதாலி‌ராஜ், நடிகர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை ஆவணப்படம் போன்றவைகள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் தற்போது கங்குலியின் வாழ்க்கை வரலாறு படத்தின் மீதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது.