பிசிசிஐ நடத்திய ‘நமன்’ விருது வழங்கும் விழாவில், இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த விழாவின் போது நடைபெற்ற கலகலப்பான ‘ரேபிட் ஃபயர்’ கேள்வி-பதில் பகுதியில் கலந்துகொண்ட அவர், தனது தனிப்பட்ட விருப்பங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது தனக்குப் பிடித்த திரைப்படம் எது என்ற கேள்விக்கு, அவர் ‘துரந்தர் என்று பதிலளித்தார்.
மேலும் மைதானத்தில் அதிரடி காட்டும் இந்த இளம் வீரரின் சுவாரசியமான மறுபக்கம் இந்த நேர்காணல் மூலம் ரசிகர்களுக்குத் தெரியவந்துள்ளது. சிறு வயதிலேயே கிரிக்கெட் உலகில் சாதனை படைத்து வரும் வைபவ், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
“>
இந்நிலையில் மிகக் குறைந்த வயதிலேயே ரஞ்சி கோப்பை போட்டிகளில் அறிமுகமாகி சரித்திரம் படைத்த இவர், இந்திய கிரிக்கெட்டின் அடுத்த பெரிய நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறார். விருது விழாவில் அவர் காட்டிய தன்னம்பிக்கையும், விளையாட்டுத் தனமான பதில்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், கிரிக்கெட் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
