கர்நாடக மாநிலத்தில் 3000 மக்கள் தொகை கொண்ட கிராம பஞ்சாயத்துகளில் மது கடைகளை திறப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலமாக பத்தாயிரம் கோடி முதல் 15,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்டி இலவச திட்டங்களுக்கு பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தான் வழங்கிய ஐந்து இலவச வாக்குறுதிகளில் பெண் பயணிகளுக்கு இலவச பேருந்து வசதி, 200 யூனிட் இலவசம் மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய், 10 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.

மேலும் பட்டதாரி மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் தோறும் 3000 ரூபாய் மற்றும் 1500 ரூபாய் வழங்கும் திட்டம் மட்டும் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த இலவச திட்டங்களை தொடர்ந்து வழங்கவும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது. அதேசமயம் 3000 மக்கள் தொகை கொண்ட கிராம பஞ்சாயத்துகளில் மதுக்கடைகளை திறக்கவும் தற்போது அரசு திட்டமிட்டுள்ளது.