எல் ஐ சி ஜீவன் லாப் பிளான் 936 திட்டம் ஒரு எண்டோமென்ட் திட்டம் ஆகும். ஆயுள் காப்பீட்டுடன் இது சேமிப்பின் பலன்களையும் பயனர்களுக்கு வழங்கி வருகின்றது. இந்த சேமிப்பின் முடிவில் நீங்கள் செலுத்திய பணத்திற்கும் அதிக அளவிலான லாபத்தை பெறலாம். குறைந்தபட்சம் எட்டு வயது முதல் 75 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேர முடியும் எனவும் காப்பீட்டுத் தொகை குறைந்த பட்சம் 2 லட்சம் ரூபாய் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 16, 21 மற்றும் 25 ஆண்டுகள் பாலிசி காலத்தை தேர்வு செய்து கொள்ள முடியும். இந்த திட்டத்திற்கான பிரீமியம் செலுத்தும் காலம் 16 ஆண்டுகள் வரை குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பயணங்கள் ஒரு வேலை இறந்து விட்டால் அவர்களின் அடிப்படை தொகை அல்லது வருடாந்திர பிரீமியத்தின் துவக்கி ஏழு மடங்கு அதிக பலன்களை பெறலாம். தினசரி 252 ரூபாய் செலுத்தும் பட்சத்தில் இந்த திட்டத்தின் பாலிசிதாரர்கள் இறுதியில் 54 லட்சம் ரூபாய் தொகையை பெறலாம்.

அதுமட்டுமல்லாமல் இந்த திட்டத்தில் இரண்டு வருடங்கள் தொடர்ந்து ப்ரீமியம் செலுத்திய பிறகு பாலிசிதாரர்கள் கடன் வசதியையும் பெற்றுக் கொள்ள முடியும். எல் ஐ சி பாலிசிதாரரான பெற்றோர் உயிரிழந்து விட்டால் அவர்களின் எதிர்கால பிரிமியங்கள் தள்ளுபடி செய்யப்படும். பாலிசிக்காலத்தில் பாலிசிதாரர் உயிரிழந்து விட்டால் அவரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்படும். அதே சமயம் பாலிசிதாரர்கள் தாங்கள் செலுத்தும் பிரீமியம் தொகையையும் கால அளவையும் மாற்றிக் கொள்வதற்கான வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.