தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, குடியரசு தினம் (ஜனவரி 26), உலக தண்ணீர் தினம் (மாா்ச் 22 ), தொழிலாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), மகாத்மா காந்தி பிறந்தநாள் (அக்டோபர் 2), உள்ளாட்சிகள் தினம் (நவம்பர் 1) ஆகிய தினங்களில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களில் ஊராட்சிகளின் வளா்ச்சிப் பணிகள், எதிா்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராம சபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும் கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை என்றாலும் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உள்ளது. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமைச் செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சித் துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனிப்பிரிவு – 044-25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொண்ட நீங்கள் புகார் தெரிவிக்கலாம்.