உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிராமப்புறங்களில் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸின் பிரவர்தக் டெக்னாலஜி ஃபவுண்டேஷன் , வித்யா சக்தி-யுடன் கூட்டு சேர்ந்துள்ளது.வித்யா சக்தி கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வர்ச்சுவல் ரியாலிட்டி மூலமாக கல்வி கற்பதற்கான ஓபன் மெண்டார் முயற்சியாகும். Openmetor என்பது softmith infotech private limited இன் car முயற்சியாகும்.

இதற்கு முன்பாக கொரோனா காலத்தில் விரிவடைந்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் இடையே உள்ள அறிவு இடைவெளியை சமாளிப்பதற்கு இந்த முயற்சி எடுக்கப்பட்டது. இந்த வகுப்புகள் குறிப்பாக மொழி அடிப்படைகள் மற்றும் கணிதம் மற்றும் அறிவியலில் கவனம் செலுத்த உள்ளது. இதற்காக வாரணாசி மாவட்டத்தில் 100 கிராமங்களில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி மொழியில் பாடம் நடத்தப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது