மும்பை வான்கேடே மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பெயரில் புதிய ஸ்டாண்ட் திறப்பு விழா நடைபெற்றது. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், இந்திய டி20 அணியின் கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் நட்சத்திரமுமான சூர்யகுமார் யாதவ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். ​நிகழ்ச்சியின் போது சூர்யகுமாரைப் புகைப்படம் எடுக்க முயன்ற கேமராமேன் ஒருவர், எதிர்பாராத விதமாகத் தடுமாறி கீழே விழுந்தார்.

இதைக் கண்ட சூர்யகுமார், ஒரு நொடிகூட யோசிக்காமல் உடனடியாக அவரிடம் ஓடிச் சென்று, அவரைத் தூக்கி விட்டு, அவருக்கு காயம் ஏதும் இல்லையே என்பதை உறுதி செய்த பிறகே அங்கிருந்து நகர்ந்தார். சர்வதேச அளவில் மிகப்பெரிய நட்சத்திரமாக வளர்ந்த பிறகும், சூர்யகுமார் காட்டிய இந்த எளிமையும் மனிதாபிமானமும் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் இதயங்களை வென்று வருகிறது.