காவிரியின் உபரி நீரை தேக்கி வைத்து பயன்படுத்தவே மேகதாதுவில் அணைகட்ட திட்டம் என கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார்..

காவிரியின் உபரி நீரை தேக்கி வைத்து பயன்படுத்தவே மேகதாதுவில் அணைகட்ட திட்டம் என கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.. யாருடைய ஒதுக்கீட்டு நீரை தடுக்கவோ, மறுக்கவோ மேகதாது அணை கட்ட திட்டமிடவில்லை என பிரியங் கார்கே தெரிவித்துள்ளார். அணை கட்டும் திட்டம் குறித்து தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.. கர்நாடக அமைச்சரின் இந்த பேச்சால்  சர்ச்சை எழுந்துள்ளது

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை தமிழக அமைச்சர் துரைமுருகன் நேற்று சந்தித்த நிலையில் கர்நாடக அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.