மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தி மாவட்டத்தில் வைத்து பழங்குடியின தொழிலாளியின் மீது ஒரு நபர் சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் காணொளி வைரலானதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அதே பகுதியை சேர்ந்த பர்வேஸ் சுக்லா  என்பவரை கைது செய்தனர். இவர் பாஜகவை சேர்ந்தவர்  என கூறப்படுகிறது. இந்நிலையில் முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரை மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தனது வீட்டிற்கு அழைத்து அந்த இளைஞரின் காலை கழுவி மாலை சூட்டி மரியாதை செலுத்தியுள்ளார்.

மேலும் அவர் அவமானப்படுத்தப்பட்டதற்கு மன்னிப்பும் கோறியுள்ளார். இது குறித்த வீடியோவில் அந்த பழங்குடியின இளைஞரிடம் முதலமைச்சர் கூறியிருப்பதாவது, “நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். அந்த வீடியோவை பார்த்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். மக்கள் எனக்கு கடவுளுக்கு சமம்” என கூறியுள்ளார். இந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

வீடியோவை காண