தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் ‘அதிகாரப் பகிர்வு’ குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் மேலிடக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் இன்று (ஜன. 17) டெல்லி புறப்பட்டுச் சென்றார். இது தொடர்பாகத் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள

அவர், “இன்று காலை மதுரையில் இருந்து புதுடெல்லி செல்கிறேன்; எனக்காக அல்ல, எனது பேரியக்கத்தைக் காக்கும் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை மேலிடத்திடம் எடுத்துச் சொல்லவே இந்தப் பயணம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியிடம் தமிழக காங்கிரஸாரின் விருப்பத்தை முன்வைக்கப் போவதாகவும், “நமது உரிமையை மீண்டும் ஒருமுறை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது” என்று உறுதியாகப் பதிவிட்டுள்ளார்.

“>

 

மதவாத சக்திகளை வீழ்த்துவதோடு, தொண்டர்களின் கௌரவத்தையும் காக்க வேண்டும் என்றும், “நட்புக்குத் தோள் கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்றும் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இம்முறை கூடுதல் அழுத்தம் கொடுக்கும் என்பதையே உறுதிப்படுத்துகின்றன.