தமிழகம் முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் செப்டம்பர் 15 ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடங்குகிறது. காலாண்டு தேர்வு முடிவடைந்த பிறகு மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வாரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இந்த விடுமுறை மாணவர்கள் தேர்வுக்கு தயாராக பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை என்பதால் அரசு விடுமுறை. இதைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை. மேலும் இதனால் மொத்தமாக மூன்று நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை வருகிறது. இந்த விடுமுறை அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.