சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வரும் நிலையில் இன்று விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,17,680 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,710 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விளையும் குறைந்து ஒரு கிராம் 16,047 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,28,376 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 4 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 276 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,76,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.