பஞ்சாபின் குர்தாஸ்பூரில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட காலிஸ்தானி கமாண்டோ படையைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் உ.பி காவல்துறை கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டன.

இதில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் குர்விந்தர் சிங், ரவி என்ற வீரேந்தர் சிங் மற்றும் பிரதாப் சிங் என்ற ஜஸ்பிரீத் சிங் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் இவர்களது உடல்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பயங்கரவாதிகளின் சடலத்தை மற்றொரு ஆம்புலன்ஸ்க்கு மாற்றி பஞ்சாபிற்கு அனுப்பி வைத்தனர்.