இந்தியாவில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசிடம் திட்டமே இல்லை என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரீனா குப்தா கூறுகையில், காற்று மாசு காரணமாக வட இந்தியாவில் உள்ள மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை. சுமார் 70% காற்று மாசு டெல்லியை சுற்றியுள்ள பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.