உலகின் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்றாக யானைகள் கருதப்படுகின்றன. அதே நேரத்தில், சில சூழ்நிலைகளில் அவை கடும் கோபத்தை வெளிப்படுத்தி, மனிதர்களுக்கும் சொத்துகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. இதுபோன்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த காணொளியில், காட்டுச் சாலையில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு காரை பார்த்த யானை திடீரென கோபமடைந்து அதனை நோக்கி நகரத் தொடங்குகிறது. அச்சமயம் காரை ஓட்டி வந்த நபர் வாகனத்தை நிறுத்தாமல் முன்னோக்கி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் கோபமடைந்த யானை, காரை தாக்கி கவிழ்க்க முயன்றுள்ளது.
மேலும், யானை தனது தும்பிக்கையை காருக்குள் நுழைத்தது. இதனால் காரில் இருந்த குடும்பத்தினர் உயிரைக் காப்பாற்றுவதற்காக வாகனத்தை கைவிட்டு ஓடினர். அதிர்ஷ்டவசமாக யானை அவர்களைத் தொடர்ந்து தாக்கவில்லை. இல்லையெனில் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
इसको कहते है मौत की मुह से बचकर आना *
रास्ते में जब हाथी ने गाड़ी को पकड़ ली तब अपनी समझदारी की वजह से सबलोग की जान बच गई..👍
कार छोर कर आके सही किया ना दोस्तों ? pic.twitter.com/iIqHKeRHWk
— Khadiza (@Khadiza_kbc) December 19, 2025
இந்த சம்பவம், காட்டுப் பகுதிகளில் செல்லும் போது மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. இந்த 45 விநாடிகள் கொண்ட காணொளியை சமூக ஊடக தளமான X (ல் @Khadiza_kbc என்ற கணக்கு பகிர்ந்துள்ளது. அந்த பதிவில், “இதைத்தான் மரணத்திலிருந்து தப்பித்தல் என்பார்கள். சாலையில் யானை காரை தாக்கியபோதும், சரியான முடிவெடுத்ததால் அனைவரின் உயிரும் காப்பாற்றப்பட்டது. காரை விட்டுவிட்டு ஓடியது சரியான தீர்மானமா?” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காணொளி இதுவரை 61 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவர், “இதுபோன்ற சூழ்நிலையில் வாகனத்தை விட்டு விலகி தூரம் பேணுவதுதான் அறிவார்ந்த முடிவு. யானையுடன் மோதுவது துணிச்சல் அல்ல; உயிரைக் காப்பாற்றுவதுதான் உண்மையான ஞானம்” என்று கூறியுள்ளார். மற்றொருவர், “அதிர்ஷ்டம் பக்கம் இருந்தால், யமராஜா விடுமுறையில் இருப்பார்” என கருத்து தெரிவித்துள்ளார்.
