பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூமி பெட்னேகர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான நிலையில், சமீபத்தில் நடைபெற்ற‌ க்யாரா அத்வானி மற்றும் சித்தார்த்‌ மல்கோத்ரா திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்த திருமண விழா முடிவடைந்ததும் நடிகை பூமி காரில் வீட்டிற்கு கிளம்பியுள்ளார். அப்போது காரில் இருந்த ஒருவர் நடிகை பூமிக்கு லிப்லாக் முத்தம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் தீயாக பரவி வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இருக்கும் நபர் யார் என்பது தெரியாத நிலையில் இது தொடர்பாக நடிகை பூமி இதுவரை எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனால் காருக்குள் இருப்பது நடிகை பூமி காதலிப்பதாக சொல்லப்படும் பிரபல பில்டரான யஷ் கட்டாரியா என்று கூறப்படுகிறது. மேலும் நடிகை பூமி தன்னுடைய காதல் குறித்து அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.