மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், மாரடைப்பு ஏற்பட்ட கார் ஓட்டுநரின் உயிரை பெட்ரோல் நிலைய ஊழியர் தனது துரித செயலால் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 26 அன்று தப்ராவில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்தில் தனது காருக்கு எரிபொருள் நிரப்ப வந்த ஓட்டுநருக்கு திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

இந்நிலையில் இதைக் கண்ட அங்கிருந்த ஊழியர் அர்மான் கான், சிறிதும் தாமதிக்காமல் ஓட்டுநரின் நாடித்துடிப்பை பரிசோதித்து, அவருக்கு இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை மீட்கும் ‘சிபிஆர்’ சிகிச்சையை சுமார் 55 வினாடிகள் தொடர்ந்து அளித்தார்.

“>

இதனால் அர்மான் கானின் இடைவிடாத முயற்சியால் ஓட்டுநரின் சுவாசம் சீராகி அவர் மயக்கத்திலிருந்து மீண்டார். பின்னர் அவர் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சரியான நேரத்தில் அளிக்கப்பட்ட இந்த முதலுதவிதான் ஓட்டுநரின் உயிரைக் காப்பாற்றியதாக மருத்துவர்கள் பாராட்டினர்.

மேலும் பாதுகாப்பு வீடியோக்கள் மூலம் தான் கற்றுக்கொண்ட இந்த உயிர் காக்கும் முறையை இக்கட்டான சூழலில் மிகச் சரியாகப் பயன்படுத்திய அர்மான் கானின் மனிதநேயத்தையும் சமயோசித புத்தியையும் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.