உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக முக்கிய நிர்வாகியான ராகுல் பால்மிக்கி என்பவர் திருமணமான பெண்ணுடன் காரில் தனிமையில் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கையிலாவன் கிராமத்திற்கு அருகே ஒரு கார் சந்தேகப்படும்படியாக நின்றது.

உடனே கிராம மக்கள் காருக்கு அருகே சென்று பார்த்த போது ராகுல் அரைகுறை ஆடையுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவருடன் ஒரு பெண்ணும் இருந்துள்ளார். உடனே மக்கள் செல்போனில் வீடியோ எடுக்க ஆரம்பித்ததும் ராகுல் நான் உங்கள் காலில் விழுகிறேன் என மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோவில் பேசியுள்ளார்.

அந்த பெண்ணின் முகத்தை மறைக்க முயற்சி செய்துள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ராகுல் தலைமறைவாக இருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை கட்சி தரப்பில் இருந்தும் போலீசார் தரப்பில் இருந்தும் எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை