மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் ஒரு 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் சென்றுள்ளார். இந்த மாணவி ஏறிய ஆட்டோவில் ஏற்கனவே ஒருவர் இருந்த நிலையில் ஸ்கூல் வந்த பிறகும் ஆட்டோ ஓட்டுனர் வண்டியை நிறுத்தாமல் சென்றுள்ளார். மாணவி வண்டியை நிறுத்துமாறு ஆட்டோ ஓட்டுனரிடம் பலமுறை கூறியும் அவர் நிறுத்தவில்லை.

இதனால் தான் கடத்தப்படுவது அறிந்த மாணவி புத்திசாலித்தனமாக காம்பசை பயன்படுத்தி அந்த ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பக்கத்தில் இருந்த நபரை குத்திவிட்டு பின்னர் கீழே குதித்து தப்பினார். பின்னர் அங்கிருந்து தப்பி பள்ளிக்கு வந்த மாணவி நடந்ததை தன் பெற்றோர்களிடம் கூறினார்.

உடனடியாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்த முயன்ற நபர்களை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.