உத்திரபிரதேச மாநிலத்தில் சகாரன்பூர் மாவட்டத்தில் கந்த்வேதா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏராளமானோர் வந்தனர். அப்போது இரு இளைஞர்கள் காரின் சன்ரூப் வழியாக பட்டாசு வெடித்தனர். பின்னர் அவர்கள் அடுத்தடுத்து காருக்குள் இருந்தபடியே சன்ரூப் வழியாக பட்டாசுகளை வெடித்தனர். ‌

இதனால் திடீரென பட்டாசு காருக்குள் வெடித்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதில் இரு வாலிபர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அருகில் இருந்தவர்கள் மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.