நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் குறித்து அடுத்தடுத்து அனல் பறக்கும் கருத்துக்களை வெளியிட்டு வரும் மூத்த நடிகர் சிவகுமார், தற்போது 1967-ம் ஆண்டு நடந்த வரலாற்றுச் சம்பவங்களை ஒப்பிட்டு திமுக மற்றும் தவெக தலைவர் விஜய் குறித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.

1954-ல் இருந்து ஒன்பது ஆண்டுகள் இந்த நாட்டை உன்னதமாக ஆண்ட பெருந்தலைவர் காமராஜர், இறக்கும் போது தனது தலைமாட்டில் வெறும் 140 ரூபாய், நாலு ஜோடி சட்டை, இரண்டு ஜோடி செருப்பு மற்றும் சில புத்தகங்களை மட்டுமே வைத்திருந்தார் என்றும், தன் பெயருக்கு ஒரு பைசா சொத்து கூட சேர்க்காத அப்படிப்பட்ட உன்னதமான தலைவனையே தமிழக மக்கள் தேர்தலில் தோற்கடித்தார்கள் என்றும் அவர் வரலாற்றை நினைவு கூர்ந்துள்ளார்.

​அன்று மக்களுக்கு காமராஜர் தேவையில்லை, ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைத்ததால் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்று சுட்டிக்காட்டிய சிவகுமார், அன்று பக்தவத்சலம் அவர்கள் திமுக-வை ‘விஷக்கிருமி வந்துவிட்டது’ என்று விமர்சித்ததையும் ஓப்பனாகப் பேசினார். “அன்று விஷக்கிருமி என்று சொன்ன திமுக-வை மக்கள் 59, 69 வருடங்கள் வாழ வைக்கவில்லையா? அதேபோல, இன்று 69 வருட கால திமுக ஆட்சியைப் பிடிக்காமல் தான் மக்கள் தவெக தலைவர் விஜய்க்கு மனப்பூர்வமாக ஓட்டுப் போட்டுள்ளனர்;

அரசியலில் மக்கள் தான் உண்மையான நீதிபதிகள், அவர்கள் ஒரு முடிவை எடுத்தால் அதை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்” என்று சிவகுமார் அதிரடியாகப் பேசியுள்ள இந்த வரலாற்றுப் பேட்டி வீடியோ, தற்போதே சோசியல் மீடியாவில் வாசகர்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.