ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகள் பலர் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்துள்ளனர். குறிப்பாக 2022 – 23 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீட்டுத் தொகை இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்ட 65 கிராமங்கள் குறித்து மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மனுவாக கொடுத்துள்ளனர்.

மேலும் கருவேல மரங்களை அப்புறப்படுத்துதல், கால்வாய் சீரமைத்தல், தாழ்வாக செல்லும் மின் வயர்களை அப்புறப்படுத்துதல், வைகை ஆற்றில் கலக்கப்படும் கழிவு நீரை தடுத்தல் போன்ற கோரிக்கைகளையும் மனுவாக ஆட்சியரிடம் விவசாயிகள் கொடுத்துள்ளனர் .மனுக்களை பெற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.