தமிழக அரசின் கனவுத் திட்டமான ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு, ஜூலை 15ஆம் தேதி முதல் தற்போது வரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர்.
இந்தப் புதிய பயனாளர்களுக்கு, வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். விண்ணப்பித்தவர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியபோதும், திட்டத்திற்குத் தகுதியானவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் இருந்ததால், விண்ணப்பதாரர்கள் பலரும் கலக்கத்தில் இருந்தனர்.
இந்தக் கலக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ஒரு உறுதியை அளித்துள்ளார். அதாவது, இந்தத் திட்டத்திற்குப் புதிதாக விண்ணப்பித்தவர்களில் தகுதியுடையோர் குறித்த முழு விவரமும் வரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். தகுதியானோர் குறித்த அறிவிப்பு நவம்பர் இறுதிக்குள் வெளியாகும் என்ற தகவல், புதிய பயனாளர்களுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது.
